போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம்

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-18 19:30 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமை தாங்கினார். முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தங்கவேல், வளவன், சஞ்சீவ்குமார், ஜனனி பிரியா ஆகியோர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மேலும் முகாமில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசாரும், சிறப்பு பிரிவு போலீசாரும் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 23 மனுக்களில், 12 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், முகாமில் கலந்து கொள்ள வருபவர்கள் மீண்டும் புதிய பஸ் நிலையம் செல்ல போலீசார் சார்பில் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்