காவலர்களுக்கு வாரம் ஒருமுறை கட்டாயம் விடுமுறை கொடுக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
காவலர்களுக்கு வாரம் ஒருமுறை கட்டாயம் விடுமுறை கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
சென்னை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டிஐஜி இப்போது நம்மிடம் இல்லை என்பது துக்கம், நானும் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் கூடுதல் கவலையாக உள்ளது. நல்ல அதிகாரியாக பணி செய்தவர், ஏழை மக்களுக்காக விரும்பி பணி செய்பவர். காவல்தூறையில் அடிமட்டத்தில் உட்சபட்ச அழுத்தம் உள்ளது. உயர் அதிகாரிகளுக்கு வேறு விதமான மன அழுத்தம். தமிழ்நாட்டில் முதல் முறையாக இப்படி தற்கொலையை பார்க்கிறோம். காவல்துறையை சீரமைக்க வேண்டும்,
அதில் தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பினாலே பணி அழுத்தம் குறையும். போர்க்கால அடிப்படையில் 2 ஆண்டுகளில் 10 ஆயிரம் காவலர்களை நியமிக்க வேண்டும். காவலர்களுக்கு வாரம் ஒருமுறை கட்டாயம் விடுமுறை கொடுக்க வேண்டும். தற்கொலை செய்து கொண்ட டிஐஜியின் குடும்பத்தில் ஒருவருக்கு குரூப்-ஏ அரசு வேலை வழங்க வேண்டும்" என்றார்.