நாகை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

மத்திய அரசின் தடை காரணமாக நாகை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Update: 2022-09-28 18:45 GMT

மத்திய அரசின் தடை காரணமாக நாகை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா

நாடு முழுவதும் பாப்புலர் பி்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய ஏராளமான இடங்களில் தேசிய புலனாய்வுத் முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.இதன் தொடர்ச்சியாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய அரசு தடை

அதன் அடிப்படையில் நேற்று பாப்புலர் பி்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளை தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.அதன் ஒரு பகுதியாக நாகை அண்ணா சிலை அருகே உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த அலுவலகம் சார்ந்த அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மசூதிகள், கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்