காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம்

காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடந்தது.

Update: 2023-08-10 18:57 GMT

கரூரில் காவல்துறை ஓய்வுபெற்ற அலுவலர் சங்க கூட்டம் நடைபெற்றது. இதற்கு, தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ரெங்கராஜ், சட்ட ஆலோசகர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், போலீசாரின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையை உயர்த்தி வழங்கிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. 21 மாத அகவிலைப்படியை வழங்க வேண்டும். 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பஸ் பாஸ் கொடுக்க வேண்டும். வடிவேல் நகர் காவலர் குடியிருப்பில் சமுதாய கட்டிடம் கட்டி தர வேண்டும். மணிப்பூரில் அமைதி நிலவ மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்