ரூ.1 லட்சத்தை இழந்தவருக்கு பணத்தை மீட்டு கொடுத்த போலீசார்

செல்போனில் வந்த தகவலை நம்பி ரூ.1¼ லட்சத்தை இழந்தவருக்கு அவரது பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.

Update: 2022-06-17 17:15 GMT


செல்போனில் வந்த தகவலை நம்பி ரூ.1¼ லட்சத்தை இழந்தவருக்கு அவரது பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு கொடுத்தனர்.

பான்கார்டு காலாவதியாகி விட்டதாக கூறி

காரைக்குடி கல்லுகட்டி பகுதியை சேர்ந்தவர் சாத்தப்பன் (வயது 67). இவர் ஆட்டோமொபைல் தொழில் செய்து வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் இவருடைய செல்போனுக்கு வந்த தகவல் ஒன்றில் அவருடைய பான் கார்டு காலாவதி ஆகி விட்டதாகவும், எனவே அதை புதுப்பிக்க அந்த தகவலின் கீழுள்ள லிங்கில் முழுக்க விவரத்தை தரும்படி கூறப்பட்டிருந்தது.

இதை உண்மை என்று நம்பிய சாத்தப்பன் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய தகவல்களை கொடுத்தார். பின்னர் அவருடைய செல்போனுக்கு ஒரு ரகசிய குறியீட்டு எண் வந்தது.

ரூ.1¼ லட்சம் அபேஸ்

அந்த ரகசிய குறியீட்டு எண்ணையும் செல்போனில் அவருக்கு தகவல் தெரிவித்தார். இதன் பின்னர் அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1 லட்சத்து 38 ஆயிரத்து 995-ஐ எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்து உள்ளது.

உடனே சுதாரித்த சாத்தப்பன் உடனடியாக சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு இந்த விவரத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாத்தப்பன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்ட வங்கிக்கு தகவல் கொடுத்தனர்.

பணம் மீட்பு

இதன் பின்னர் அந்த பணத்தை சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் முடக்கி வைத்தது. பின்னர் சைபர் கிரைம் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சாத்தப்பனின் வங்கிக்கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 995-ஐ மீண்டும் அவரது வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. உடனே மோசடி செய்த பணத்தை மீட்டு ெகாடுத்த சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்