அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை

திண்டுக்கல்லில், அரிசி ஆலைகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

Update: 2022-11-01 17:47 GMT

தமிழ்நாடு அரசு வாணிப கிடங்கு மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல், அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் ஆலைகளில் அரைக்கப்பட்டு அரிசியாக மாற்றப்படுகிறது. அந்த வகையில் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் 6 அரிசி ஆலைகள் செயல்படுகின்றன. இந்த அரிசி ஆலைகளில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது நெல் இருமுறை வேகவைத்து முறையாக அரைக்கப்படுகிறதா? என்று சோதனையிட்டனர். மேலும் அரசு வழிகாட்டு விதிகளை முறையாக கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்