பட்டாசு கடைகளில் போலீசார் தீவிர சோதனை
மயிலாடுதுறை அருகே பட்டாசு கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
குத்தாலம்;
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் பட்டாசு கடைகளில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தயாரிப்பு நிலையங்களில் உள்ள வெடி மருந்துகள் மற்றும் பட்டாசுகளின் தரம், எடை உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவைக்கு அதிகப்படியான அளவுகளில் பட்டாசுகள் இருப்பு உள்ளதா? என்றும் கேட்டறிந்தார். மேலும் வாடிக்கையாளர்கள் தேவைக்கு அதிகமாக பட்டாசுகளை வாங்கினால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு தயாரிப்பு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் ரகுராமன், ராஜராஜவர்மா, ஆகிேயார் இருந்தனர்.