ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு

பொம்மன், பெள்ளி ஆகிய இருவருக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-07 09:35 GMT

 முதுமலை,

ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளி ஆகிய இருவருக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேலும், வரும் 9ம் தேதி முதுமலை செல்லும் பிரதமர் மோடி, தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் படத்தில் நடித்த தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்திக்கிறார். இதன் காரணமாக, இந்த தம்பதிகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்