பழனியில் தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை

பழனியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். நடத்தினர்.

Update: 2023-07-16 21:00 GMT

பழனி பகுதியில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்றது தொடர்பாக கடந்த சில மாதங்களில் பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் நகர் மற்றும் புறநகர் பகுதியில் திருட்டு சம்பவமும் அதிகமாக நடந்து வந்தது. மேற்கண்ட குற்ற சம்பவங்களில் வெளியூர் நபர்களே ஈடுபட்டு வருவதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக குற்ற சம்பங்களில் ஈடுபடும் நபர்கள் பழனி பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் தங்கி குற்ற செயல்களை அரங்கேற்றி வந்ததாகவும் தெரியவந்தது. இதனால் குற்றச்சம்பவத்தில் ஈடுபடுவோரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் பழனியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் நகர், அடிவாரத்தில் உள்ள தங்கும் விடுதிளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது தங்கும் விடுதிகளில் தங்க வருவோரிடம் உரிய ஆவணங்கள் பெறப்படுகிறதா? சந்தேகப்படும் வகையில் யாரேனும் தங்கி உள்ளனரா? கஞ்சா, லாட்டரி சீட்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என சோதனை செய்தனர். மேலும் சந்தேகப்படும்படி யாரேனும் அறை கேட்டு வந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என விடுதி நிர்வாகிகளை போலீசார் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்