சிற்ப தொழிலாளி மர்ம சாவு

சிற்ப தொழிலாளி மர்மமாக இறந்தார்.

Update: 2022-11-03 20:15 GMT

கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை குருமூர்த்தி நகரை சேர்ந்தவர் வைரப்பன் (வயது33). சிற்ப தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. வைரப்பன் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்ததால் 2 மாதங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி அவரிடம் கோபித்துக்கொண்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைரப்பன் கீழே தவறி விழுந்ததாக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் நேற்று முன்தினம் அங்கிருந்து தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த நிலையில் வைரப்பன் மனைவி ஜெயலட்சுமியின் சித்தப்பா கீழக்கொட்டையூரை சேர்ந்த சுப்பிரமணியன் வைரப்பனின் சாவில் சந்தேகம் இருப்பதாக திருவிடைமருதூர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வைரப்பனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் சாவில் ஏதேனும் மர்மம் உள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்