மதுபாட்டில்களை திருடி புதரில் மறைத்து வைத்த மர்ம நபர்

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர் ஒருவர் அவற்றை புதரில் மறைத்து வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-08-24 17:27 GMT

திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடிய மர்ம நபர் ஒருவர் அவற்றை புதரில் மறைத்து வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூட்டு உடைப்பு

திருவாரூர் மாவட்ட எல்லையான காணூரில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இந்த மதுக்கடை அமைந்துள்ள பகுதி குடியிருப்பு இல்லாத பகுதியாகும். நேற்று இரவு இந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது மர்ம நபர் ஒருவர் மதுக்கடையின் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை திருடி உள்ளார்.

இந்த நிலையில் கடையின் காவலாளி டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து, மதுபாட்டில்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டு கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மதுக்கடை ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அங்கு மதுபாட்டில் அடங்கிய 2 பெட்டிகள் திருட்டுப்போனது தெரியவந்தது. மேலும் இந்த 2 பெட்டிகளும் அருகில் உள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததும், அதில் இருந்து ஒரு மது பாட்டில் மட்டுமே திருடப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

விசாரணை

இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடி புதரில் மறைத்து வைத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்