போலீசாக நடித்து வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறிப்பு:10 பேரை பிடித்து போலீசார் விசாரணைகொள்ளை கும்பல் தலைவன் பெங்களூருவில் பதுங்கல்

சேலத்தில் போலீசாக நடித்து வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்தது தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளை கும்பல் தலைவன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

Update: 2023-09-28 19:59 GMT

இரும்பாலை

போலீசாக நடித்து வியாபாரியிடம் ரூ.50 லட்சம் பறித்தது தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொள்ளை கும்பல் தலைவன் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

போலீசாக நடித்து பணம் பறிப்பு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 39). இவரை தொடர்பு கொண்ட சேலத்தை சேர்ந்த ஒரு கும்பல், ரூ.50 லட்சம் கொடுத்தால் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் தருவதாக ஆசைவார்த்தை கூறியது. இதை நம்பிய வெங்கடேஷ் 50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு இரும்பாலை மெயின் கேட் அருகில் உள்ள பகுதிக்கு வந்தார்.

அங்கு போலீஸ் உடையில் ஒரு கும்பல் காரில் வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள் வெங்கடேசனை வழிமறித்து நாங்கள் போலீஸ் எனவும், 50 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்ட அவர்கள், போலீஸ் நிலையம் வந்து வாங்கி செல்லும்படியும் கூறிவிட்டு அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். அதன்பிறகுதான் வந்தவர்கள் போலீஸ் இல்லை என்பதும் தெரிய வந்தது.

10 பேருக்கு தொடர்பு

இதுகுறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது போலீசாக நடித்து பணம் பறித்ததில் 10 பேருக்கு ெதாடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் போலீஸ் வேடம் அணிந்து வந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இதுபோன்ற பணம் பறிப்பில் மூளையாக செயல்பட்ட நபர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாக தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்