போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீர் சாவு

வேலூர் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் திடீரென இறந்தார்.

Update: 2023-03-09 17:55 GMT

வேலூர் முள்ளிப்பாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 50). இவர் வேலூர் சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.

நரசிம்மன் கடந்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் வருகையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து அவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து அவர் அதே மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நரசிம்மனுக்கு இன்று அதிகாலை 4 மணியளவில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டது.

வலியால் அலறிதுடித்த அவரை குடும்பத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் நரசிம்மன் உடலுக்கு சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்செல்வன் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர்.

இறந்துபோன நரசிம்மனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்