விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருவண்ணாமலையில் இந்து முன்னணி, இளைஞர்கள் அமைப்பு என பல்வேறு தரப்பினர் மூலம் பல்வேறு வடிவங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது.
வழக்கமாக திருவண்ணாமலையில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் விநாயகர் சதுர்த்தியில் இருந்து 3-ம் நாள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருவண்ணாமலை- தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளத்தில் கரைக்கப்படும்.
அதன்படி இன்று (புதன்கிழமை) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளது.
இதையொட்டி நேற்று திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருவண்ணாமலை - செங்கம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர் சிலையில் இருந்து தாமரை குளம் வரை கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். அப்போது போலீசார் கையில் துப்பாக்கி மற்றும் கலவரம் தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்றனர்.