வேலூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூரில் 2 இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

Update: 2022-08-29 17:43 GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி வேலூரில் 2 இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கொடி அணிவகுப்பு

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து 2-ந் தேதி முதல் பல்வேறு இடங்களில் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அசம்பாவிதம் ஏற்படும் என பொதுமக்கள் அஞ்சுவதை தவிர்க்கும் வகையில் நம்பிக்கை ஏற்படுத்த போலீசார் கொடி அணிவகுப்பு வேலூரில் நடந்தது.

வேலூர் சைதாப்பேட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரஜேஷ்கண்ணன் கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மிடுக்குடன் அணிவகுத்து சென்றனர். சைதாப்பேட்டை மெயின்ரோடு, லாங்குபஜார் வழியாக சென்று அண்ணாகலையரங்கம் அருகே அணிவகுப்பு முடிந்தது.

மற்றொரு அணிவகுப்பு

இதேபோல வேலூர் மாங்காய் மண்டி அருகேயும் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு மாங்காய் மண்டியில் இருந்து பெங்களூர் சாலையில் கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வரை சென்றது.

அணிவகுப்பில் அதிரடிப்படை, விரைவுப்படை, ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல்படையினர் கலந்து கொண்டு சென்றனர். இதனை ஏராளமான பொதுமக்கள் வீட்டின் முன்பும், கடையின் முன்பும் நின்று பார்த்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்