மேலூர்
மேலூரில் விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு இடங்களில் 800-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்து மகாசபா மற்றும் பா.ஜ.க. உள்பட பொதுமக்கள் சார்பில் விநாயகர் சிலைகளுடன் 2 நாட்களுக்கு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேலூர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் ஆர்லியஸ்ரிபோனி தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அணிவகுத்து வந்தனர். மேலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.