மோப்ப நாய் படைப்பிரிவை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

Update: 2023-05-11 16:01 GMT


திருப்பூர் மாவட்ட ஆயுதப்படை வளாகம் காங்கயம் ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் அயுதப்படை காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் காவலர் நல பல்பொருள் அங்காடி மற்றும் காவலர் முடி திருத்தும் நிலையத்தின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி.விஜயகுமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் முன்னிலை வகித்தார்.

ஆயுதப்படை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மோப்ப நாய் படைப்பிரிவு அலுவலகத்தை டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதுப்பிக்கப்பட்ட காவலர் உணவு விடுதியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்சன் (தலைமையிடம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்