நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் சோதனை

விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறப்படுகிறதா? என தஞ்சை அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் ேசாதனை நடத்தினர்.

Update: 2023-02-27 18:45 GMT


விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறப்படுகிறதா? என தஞ்சை அருகே நெல் கொள்முதல் நிலையங்களில் போலீசார் திடீர் ேசாதனை நடத்தினர்.

கூடுதல் டி.ஜி.பி. உத்தரவு

தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அருண் பொறுப்பேற்றதிலிருந்து பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மட்டும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கையூட்டு பெறக்கூடாது. விவசாயிகளை காக்க வைக்கக்கூடாது. வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்றும் கூடுதல் டி.ஜி.பி.அருண் உத்தரவிட்டுள்ளார்.

போலீசார் ஆய்வு

அதன்பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின்பேரில் தஞ்சை சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் தஞ்சையை அடுத்த குருங்குளம், வல்லம் பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது முறைகேடாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்ட போலீசார் விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறப்படுகிறதா? எனவும் விவசாயிகளிடம் கேட்டறிந்தனர். மேலும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்