இரும்பு பொருட்கள் திருட்டு குறித்து போலீசார் வழக்கு
இரும்பு பொருட்கள் திருட்டு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தோகைமலை,
தோகைமலை அருகே பொருந்தலூர் ஊராட்சி தெலுங்கபட்டி பஸ் நிறுத்தம் அருகே ஒரு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை நேற்று முன்தினம் காலை காவலாளி நாடக்காப்பட்டியை சேர்ந்த சொர்ணநாதன் (67) என்பவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது, ரூ.5 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.