பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை

பொள்ளாச்சியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-23 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேரை பிடித்து விசாரணை

பொள்ளாச்சி மகாலிங்கபுரம், நகர கிழக்கு போலீஸ் நிலைய பகுதிகளில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. இதற்கிடையில் சூளேஸ்வரன்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இதை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இதற்கிடையில் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் கைவரிசை காட்டிய 5 பேர் கும்பலை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த மணி, ஸ்ரீராமன், நெல்லையை சேர்ந்த அந்தோணி, தென்காசியை சேர்ந்த மணிகண்டன், சேர்மதுரை ஆகியோர் என்பது தெரியவந்தது.

பல்வேறு வழக்குகளில் தொடர்பு

இவர்களிடம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. மேலும் பிடிப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணைக்கு பிறகே எந்தெந்த பகுதிகளில் கைவரிசையை காட்டினார்கள் என்பது குறித்த விவரம் தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்