நெல்லை தச்சநல்லூர்போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இல்லை

நெல்லை தச்சநல்லூர் போலீசாருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரியவந்தது.

Update: 2023-04-11 21:30 GMT

நெல்லை தச்சநல்லூர் போலீசார் ஒரு குற்ற வழக்கில் 2 பெண்களை கைது செய்தனர். அவர்களை சிறையில் அடைப்பதற்கு முன்பாக வழக்கமான மருத்துவ பரிசோதனையும், கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பெண் கைதிக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து தச்சநல்லூர் போலீஸ் நிலையம் முழுவதும் நெல்லை மாநகராட்சி சுகாதார, தூய்மை பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்து, பிளீச்சிங் பவுடர் தூவினர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்ட கைதியிடம் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் 4 பேருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்து உள்ளது. இருந்தபோதிலும் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. முககவசம் அணிதல், புகார் அளிக்க வருவோரின் கையில் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர நெல்லை மாநகரில் காய்ச்சல் பரவல் உள்ளதா? என்பதை மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்