ரோட்டில் கிடந்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

ரோட்டில் கிடந்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

Update: 2022-10-11 22:08 GMT

சென்னிமலை

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த விக்ரம் (வயது 37) என்பவர் சென்னிமலையில் உள்ள ஈங்கூர் ரோட்டில் வீடு வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்து அதே பகுதியில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் மோட்டார் சைக்கிளில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது செல்போன் பாக்கெட்டில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டது. இதை கவனிக்காமல் விக்ரம் சென்று விட்டார். அப்போது அந்த வழியாக சென்ற சென்னிமலை கிழக்கு புது வீதியை சேர்ந்த தங்கவேல் (49) என்பவர் ரோட்டில் கிடந்த செல்போனை எடுத்து சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் ஒப்படைத்தார். அதுவரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்த அந்த செல்போனை போலீசார் இயக்கி பார்த்தார்கள். அப்போது வேறு ஒரு செல்போனில் இருந்து காணாமல் போன செல்போனுக்கு விக்ரம் அழைத்தபோது போலீசார் அவரிடம் பேசி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து செல்போனை ஒப்படைத்தனர். மேலும் ரோட்டில் கிடந்த செல்போனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தங்கவேலுவை போலீசார் மற்றும் செல்போனை தொலைத்த விக்ரம் ஆகியோர் பாராட்டினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்