லாரி மீது போலீஸ் வாகனம் மோதியதில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற 31 போலீஸ்காரர்கள் காயம்
அவினாசி அருகே லாரி மீது போலீஸ் வாகனம் மோதியதில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற 31 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
அவினாசி அருகே லாரி மீது போலீஸ் வாகனம் மோதியதில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற 31 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விபத்து
கடலூரில் இருந்து 31 போலீசார் ஆயுதப்படை போலீஸ் வாகனத்தில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்காக சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அவினாசியை அடுத்த பழங்கரை பைபாஸ் ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற லாரி எந்தவித சிக்னலும் இல்லாமல் திடீரென நின்றதாக கூறப்படுகிறது.
இதனால் போலீஸ் வாகனம் லாரியின் பின்பக்கம் மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தை ஓட்டிச்சென்ற போலீஸ்காரர் முருகன் உள்பட 31 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் அவினாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை
இதில் 16 பேர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து லாரி டிரைவர் தாதாபீர் (வயது 40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.