பூ வியாபாரி போக்சோவில் கைது

Update: 2023-07-18 17:21 GMT


திருப்பூர் பி.என்.ரோடு பாரதிநகரை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 38). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் மாரிமுத்து, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்