போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

Update: 2022-08-09 16:31 GMT


உடுமலையையடுத்த கல்லாபுரம் இந்திராபுதுநகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகன் தண்டபாணி (வயது 42).கூலித் தொழிலாளி. இவர் அமராவதிநகர் பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். அப்போது 6-வது மற்றும் 7-வது படிக்கும் இரு சிறுமிகள் பள்ளிக்கு சென்று விட்டு அதே பஸ்சில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

 இருக்கையில் அமர்ந்திருந்த அந்த சிறுமிகளிடம் தண்டபாணி பாலியல் நோக்கத்துடன் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமிகள் பெற்றோரிடம் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து ஒரு சிறுமியின் தாயார் உடுமலை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தண்டபாணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேலும் செய்திகள்