வாலிபர் மீது போக்சோ வழக்கு
பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வாலிபர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பொள்ளாச்சி,
திருப்பூர் தண்ணீர் பந்தல் பகுதியில் 29 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் ஆனைமலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவது வழக்கம்.
அப்போது உறவினரின் 16 வயது மகளான பிளஸ்-1 படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதற்கிடையில் அந்த சிறுமியை அவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் தொடர்ந்து அந்த நபர் தொல்லை கொடுத்ததால் சிறுமி விரக்தி அடைந்தார். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து உறவினரான அந்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.