இந்தியன் ஆயில் நிறுவன சூப்பிரவைசர் மீது போக்சோ வழக்கு
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இந்தியன் ஆயில் நிறுவன சூப்பிரவைசர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அணைத்தலையூரை சேர்ந்தவர் அறிவழகன் (வயது 25). இவர் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் சூப்பிரவைசராக வேலைபார்த்து வருகிறார். இவரும், 17 வயது சிறுமியும் காதலித்து வந்தார்களாம். இந்த நிலையில் அறிவழகன், வீட்டில் யாரும் இல்லாத போது, சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்தாராம். இதில் அந்த சிறுமி 6 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அறிவழகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.