சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு

கொல்லங்கோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-02-01 20:16 GMT

குளச்சல், 

கொல்லங்கோடு அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுமியுடன் காதல்

கொல்லங்கோடு அருகே உள்ள கரிமரம் பகுதியை சேர்ந்தவர் நிஷாந்த் (வயது 23), தொழிலாளி. இவருக்கும் 18 வயது நிறைவடையாத ஒரு சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. நிஷாந்த் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்ைத கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. இதனால், அந்த சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து அந்த சிறுமி ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.

போக்சோ சட்டத்தில் வழக்கு

இந்தநிலையில் சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் குழித்துறை அரசு மருத்துவமனையில் மருந்து வாங்க சென்றார். அங்கு டாக்டர்கள் சிறுமியின் ஆதார் அட்டையை ஆய்வு செய்த போது அவருக்கு 18 வயது நிறைவடையாதது தெரிய வந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகிகள் குளச்சல் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிறுமியை கர்ப்பமாக்கிய நிஷாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்