சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் ராணுவ வீரர் கைது

சிறுமி பாலியல் பலாத்காரம் போக்சோவில் ராணுவ வீரர் கைது

Update: 2022-09-10 19:58 GMT

பவானி

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியைச் சார்ந்தவர் லோகேஷ் (வயது21). இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவரிடம் பழகி வந்துள்ளார். அப்போது லோகேஷ் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுபற்றி கடந்த பிப்ரவரி மாதம் பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்மா சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் இதுபற்றி ராணுவ அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனை தொடர்ந்து ராணுவத்தில் இருந்து லோகேஷ் நீக்கப்பட்டார். பின்னர் தனது சொந்த ஊருக்கு வந்த லோகேசை போக்சோ சட்டத்தின் கீழ் பவானி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் அவர் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி கிளை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்