சித்தோட்டில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை- போக்சோவில் டிரைவர் கைது

சித்தோட்டில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-21 21:18 GMT

பவானி

சித்தோட்டில் கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோவில் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்காதல்

அந்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 36). சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும், மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் ராஜாவுக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் ராஜா அந்த பெண்ணையும், அவருடைய மகளையும் அழைத்துக்கொண்டு சித்தோடு பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

பாலியல் தொல்லை

அப்போது அந்த பெண் இல்லாத நேரத்தில் அவருடைய மகளுக்கு ராஜா பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் சிறுமியிடம் அவர், 'இதுசம்பந்தமாக வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னையும், உன் தாயையும் கொன்றுவிடுவேன்' என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். அவர் இதுபற்றி பவானி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னமா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் கோவை மத்திய சிறையில் வைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்