வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-08-17 20:05 GMT

வள்ளியூர்:

பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தை சேர்ந்தவர் சுதீஷ் (வயது 20). ஆட்டோ டிரைவர். இவர் 17 வயதான பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சுதீசை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்