பொக்லைன் ஆபரேட்டர் திடீர் சாவு

நெல்லை அருகே பொக்லைன் ஆபரேட்டர் திடீரென இறந்தார்.

Update: 2023-03-09 19:12 GMT

நெல்லை அருகே மேலபாலாமடை இந்திராநகரை சேர்ந்தவர் சந்தானம் மகன் மாரி (வயது 39). பொக்லைன் ஆபரேட்டரான இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் கீழே விழுந்து காயம் அடைந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாமாக இழந்தார்.

இந்த சம்பவம் குறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்