தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் பா.ம.க.வுக்கு உண்டு - அன்புமணி ராமதாஸ்

போராட்டங்கள் மூலம் மக்களின் உரிமைகளை பா.ம.க. பெற்றுத் தந்ததாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Update: 2024-02-04 01:08 GMT

சேலம்,

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர், வீரபாண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அன்புமணி ராமதாஸ், சேலம் மாவட்டம் பா.ம.க.வின் கோட்டை என்றார்.

தமிழகத்தை ஆள்வதற்கு அனைத்து தகுதியும், திறமையும் பா.ம.க.வுக்கு உண்டு என்றும், ஆனால் அதிகாரம் மட்டும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். கட்சி தொடங்கி 34 ஆண்டுகாலமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்ததாகவும், இதுவே அதிகாரம் பா.ம.க.வின் கையில் இருந்தால் ஒரு கையெழுத்து போதும் என்றும் போராட்டங்கள் நடத்த தேவை இருக்காது என்றும் அவர் கூறினார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்