பா.ம.க. செயற்குழு கூட்டம்

திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-10-12 18:45 GMT

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் மேற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் விளந்தை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாலசக்தி கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும் பேசினார். கூட்டத்தில் வக்கீல் மாவட்ட துணை செயலாளர் சுவிஜி சரவண்ணக்குமார், விளந்தை ஊராட்சி மன்ற தலைவர் பூமாஅய்யனார், மாவட்ட உழவர் பெருக்க தலைவர் பழனிவேல், நிர்வாகிகள் சதீஷ், ராஜேஷ், பாஸ்கர், பாலாஜி, கோதண்டம், தமிழ்ச்செல்வன், செந்தில், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்