தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்துவார்

தமிழகத்தில் பிரதமர் மோடி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

Update: 2022-07-26 19:05 GMT

தமிழகத்தில் பிரதமர் மோடி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.

காமராஜர் நினைவு இ்ல்லம்

விருதுநகர் காமராஜர் நினைவு இல்லத்தின் முன்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது:-

சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி வேலூர் கோட்டையில் தொடங்கி வந்தே மாதர பாத யாத்திரை மேற்கொண்டுள்ளோம். சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்ந்த நினைவிடங்களுக்கு சென்று அவர்களின் தியாகங்களையும், வரலாற்றையும் வெளிக்கொணரும் வகையில் இந்த யாத்திரை மேற்கொண்டுள்ளோம்.

அந்த வகையில் காமராஜர் நினைவு இல்லத்திற்கு வந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். காமராஜரின் பொற்கால ஆட்சியில் தமிழகம் கல்வி, தொழில், வேளாண்மை, வணிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மேம்பட்டுள்ளது.

அன்னதானம்

சதுரகிரி கோவிலில் அன்னதானம் வழங்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அன்னதானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அன்னதானத்திற்கு தடையை நீக்கி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் பா.ஜ.க. நடத்தும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதை தவிர்க்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவிகள் தற்கொலை

பள்ளிகளில் மாணவிகள் தற்கொலை செய்யும் நிகழ்வுகளை தடுக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாற்று நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அமைக்கப்படவிருக்கும் பேனா நினைவுச்சின்னத்தை வாபஸ் பெறவில்லை என்றால் அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.

தமிழகத்தில் பிரதமர் மோடி காமராஜர் ஆட்சியை ஏற்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன், பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல ராஜபாளையத்தில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் பி.எஸ். குமாரசாமி ராஜாவின் சிலைக்கு அர்ஜூன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருத்தங்கலில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, அர்ஜூன்சம்பத் சந்தித்து 30 நிமிடம் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்