பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது
பிளஸ்-2 தமிழ் தேர்வு எளிதாக இருந்தது என மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 தமிழ் தேர்வு எழுதி விட்டு வெளியே வந்த மாணவிகள் ஷோபாஜோதி, ஜெயஸ்ரீ, வீரலட்சுமி ஆகியோர் கூறியதாவது:-
தமிழ் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததாகவும், 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
பொதுத்தேர்வில் முதல் தேர்வான தமிழ் தேர்வு எளிதாக இருந்த நிலையில் மற்ற பாட தேர்வுகளை எழுதவும் எங்களுக்கு ஊக்கம் கிடைத்துள்ளதாகவும், அனைத்து தேர்வுகளும் எங்களுக்கு எளிதாக அமைந்து நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.