எலி பேஸ்ட் தின்று பிளஸ்-2 மாணவி தற்கொலை
எலி பேஸ்ட் தின்று பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
துவரங்குறிச்சியை அடுத்த பாலக்குறிச்சியை சேர்ந்தவர் பிரவீனா (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 18-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாதபோது, எலி பேஸ்ட் தின்று மயங்கி கிடந்தார். இதைகண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.