பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

பொள்ளாச்சி அருகே காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-06 18:45 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே காதல் விவகாரத்தில் பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பள்ளி மாணவி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பழனிகவுண்டன்புதூரை சேர்ந்தவர் தனபால். இவரது மகள் அபிநயா(வயது 17). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவருக்கும், 18 வயது வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

இந்த விவகாரம் அபிநயாவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மகளை கண்டித்தனர். அதன்பிறகு அந்த வாலிபருடன், அபிநயா பேசுவது, பழகுவதை தவிர்த்தார். ஆனாலும் அவர் செல்போன் மூலம் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை

மேலும் கடந்த 3-ந் தேதி அபிநயாவின் வீட்டிற்கு சென்று ஏன் என்னிடம் பேசுவது இல்லை என்று அவர் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் அந்த வாலிபரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மனவிரக்தியில் இருந்த அபிநயா நேற்று முன்தினம் மாலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்