பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
திருச்சுழி அருகே பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சுழி அருகே உள்ள முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். தனியார் வாகன டிரைவர். இவரது மகள் நித்தியலட்சுமி (வயது 17). இவர் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் முத்துராமலிங்கபுரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனால் நித்தியலட்சுமி பள்ளிக்கு செல்லாமல் விடுப்பு எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை ரவிச்சந்திரனும், அவரது மனைவியும் நித்தியலட்சுமியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த அவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனி அறையில் தூக்குப்போட்டு உள்ளார். வீட்டில் இருந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை நித்தியலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.