பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை

பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி தற்கொலை தோல்வி பயத்தில் விபரீத முடிவு.

Update: 2023-04-06 20:44 GMT

திருச்சி,

திருச்சி மாவட்டம், முசிறியில் துறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 59). இவருடைய மகள் வர்ஷா(20). கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த இவர், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் இந்த ஆண்டு அவர் வீட்டில் இருந்தபடியே படித்து, தனித்தேர்வராக பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினார். தேர்வுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், தேர்வில் அடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் அவர் இருந்ததாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 4-ந் தேதி வீட்டில் இருந்த எலிமருந்தை(விஷம்) அவர் தின்றுவிட்டார். சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த வர்ஷா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்