பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

குளித்தலை அருகே சகோதரி செல்போன் தர மறுத்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-08-10 18:22 GMT

பிளஸ்-1 மாணவி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வை.புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் தீபிகா (வயது 15). இவர் குளித்தலையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் தீபிகா தனது அக்கா நந்தினியிடம் செல்போன் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நந்தினி செல்போனை தரமறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட தீபிகா தனது வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். இதைக்கண்ட பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்கொலை

அங்கு தீபிகாவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தற்கொலை குறித்து தீபிகாவின் தாயார் லதா குளித்தலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சகோதரி செல்போன் தராததால் பிளஸ்-1 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்