பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து சாவு

பாவூர்சத்திரம் அருகே பிளஸ்-1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-25 18:45 GMT

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கீழ காலனி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வன். இவருடைய மனைவி கலைச்செல்வி. இவர்களது மகள் சுருதி (16). இவர் அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து முடித்துள்ளார். சுருதி அடிக்கடி செல்போன் பார்த்து வந்ததாகவும், அதை அவரது தாய் கலைச்செல்வி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுருதி கடந்த 18-ந்தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் தென்காசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்