அட்சயலிங்கசுவாமி கோவிலில் உழவாரப்பணி
அட்சயலிங்கசுவாமி கோவிலில் உழவாரப்பணி
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த ஸ்ரீகண்டிநத்தம் கிராமத்தில் அன்னை மகாசக்தி நாகாத்தம்மன் கோவில் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையின் சார்பில் அறங்காவலர் ராமமூர்த்தி சுவாமிகள் தலைமையில் கீழ்வேளூர் அட்சயலிங்கசுவாமி கோவிலில் உழவாரப்பணி நடைபெற்றது. இதில் அட்சயலிங்க சுவாமி கோவில் செயல் அலுவலர் பூமிநாதன், நாகாத்தம்மன் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உழவாரப்பணி செய்தனர்.