பணி முடிந்த பிறகு குடும்பத்தினரின் சந்தோஷங்களில் அக்கறை காட்ட வேண்டும்

பணி முடிந்த பிறகு குடும்பத்தினரின் சந்தோஷங்களில் அக்கறை காட்ட வேண்டும் என போலீசாருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

Update: 2023-07-08 21:14 GMT

தஞ்சாவூர்;

பணி முடிந்த பிறகு குடும்பத்தினரின் சந்தோஷங்களில் அக்கறை காட்ட வேண்டும் என போலீசாருக்கு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

தஞ்சை தீர்க்க சுமங்கலி மகாலில் போலீஸ் துறையினரின் மனஅழுத்தத்தை போக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது.இந்த கூட்டத்தில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-காவலர்களுக்கு கடமைகள் எந்த அளவு முக்கியமோ அதுபோன்று தன் குடும்பமும் முக்கியம். அதனை கருத்தில்கொண்டு பணி முடிந்த பிறகு தனது குடும்பத்தினருடைய சந்தோஷங்களில் அக்கறை காட்டுவது முக்கியம். அது உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க செய்யும்.

மகிழ்ச்சி

தங்களுடைய மனைவி, மகள், மகன் மற்றும் தாய், தந்தையரை அரவணைத்து அவர்களிடத்தில் மனம் விட்டு பேசி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். உங்களுடைய நிறை, குறைகள் துறை ரீதியானது என்றால் தயங்காமல் என்னிடம் தெரியப்படுத்தலாம்.உரிய காரணங்களோடு விடுமுறை கேட்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக தஞ்சைக்கு வந்த டி.ஜி.பி. சங்கர் ஜிவாலை திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. கார்த்திகேயன், தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் ஆஷிஷ் ராவத்(தஞ்சை), சுரேஷ்குமார்(திருவாரூர்), ஹர்ஷ்சிங்(நாகை), நிஷா(மயிலாடுதுறை) மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்