பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

Update: 2022-07-09 19:52 GMT

மெலட்டூர்:

அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் வடக்குமாங்குடி ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை வடக்குமாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ் தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கேரி பேக் மற்றும் பிளாடிக் கப்புகளை பயன்படுத்துவதையும், வாங்குவதையும் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அப்துல்நாசர், ஊராட்சி செயலாளர் கார்த்திக், பணிதள பொறுப்பாளர் அம்பேத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்