பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கரம்பயம்:
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைக்காடு ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினம் சின்னதம்பி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெரோம் பொன்னுசாமி, புனித சவேரியார் உயர்நிலைப்பள்ளி தாளாளர் மரிய ஜோசப் ஜெரால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் அணைக்காடு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், புனித சவேரியார் உயர்நிலைப் பள்ளி மாணவ- மாணவிகள், கிராம மக்கள் உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்போம் இன்னுயிர் காப்போம் என்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனர்.