திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-06-17 15:56 GMT

திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு செயல் அலுவலர் ஆனந்தன், பேரூராட்சி துணைத்தலைவர் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியை பேரூராட்சி தலைவர் அஞ்சுகம்கணேசன் தொடங்கி வைத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினார்.

இதில் கலந்துகொண்டவர்கள் குப்பைகளை தரம் பிரிப்பது, பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்துவது, பிளாஸ்டிக்கின் தீமைகள் என பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தபடி கோஷம் எழுப்பி சென்றனர். பேருராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று கடை வீதியில் முடிவடைந்தது. இதில் பள்ளி மாணவ-மாணவிகள், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்