பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

பலக்கனூத்து ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது.

Update: 2023-03-17 19:00 GMT

ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பலக்கனூத்து ஊராட்சிக்குட்பட்ட செம்மடைப்பட்டியில் உள்ள ஆர்.சி.சிறுமலர் தொடக்கப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசார கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கி பேசுகையில், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகளை பற்றி விளக்கி கூறினார். ஒன்றிய கவுன்சிலர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி ராமசாமி வரவேற்றார். அப்பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகளில் பிளாஸ்டிக் பொருட்களை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் பிரித்து எடுத்தனர். அந்த குப்பைகளை ஒன்றியக்குழு தலைவர் அள்ளி போட்டார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பவுல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேதா, திருமலைசாமி, வார்டு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவிகள், தூய்மை காவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். பிரசாரத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் செல்வக்கொடி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்