தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிய பிளாஸ்டிக் அகற்றம்

தொப்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிய பிளாஸ்டிக் அகற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2023-04-12 18:45 GMT

தர்மபுரி வனக்கோட்டத்தில் தர்மபுரி வனச்சரக எல்லைக்குட்பட்ட தொப்பூர் காப்புக்காடு, பரிகம் காப்புக்காடு ஆகிய பகுதிகள் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த நெடுஞ்சாலையில் அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதை கண்டறிந்த தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் ராகுல் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு மேற்பார்வையில் தர்மபுரி வனச்சரக அலுவலர் அருண் தலைமையில் வன பணியாளர்கள் மற்றும் தொப்பூர் சுங்கச்சாவடி பணியாளர்கள் இணைந்து தேசிய நெடுஞ்சாலை ஓரம் கொட்டப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 100-க்கும் மேற்பட்டோருக்கு மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன.

இனி வரும் காலங்களில் காப்புக்காட்டை ஒட்டியுள்ள சாலை பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை போடவோ, குப்பைகளை கொட்டவோ, வாகனங்களை நிறுத்தவோ கூடாது. வன உயிரினங்களுக்கு உணவு வழங்ககூடாது. இதை மீறினால் வனச்சட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்