மேம்பாலத்தில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும்

தஞ்சை பெரிய கோவில் அருகே மேம்பாலத்தில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-13 21:39 GMT

தஞ்சை பெரிய கோவில் அருகே மேம்பாலத்தில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாலம்

தஞ்சையில் உலக பிரசித்திப்பெற்ற பெரிய கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள், போக்குவரத்து வசதிக்காக பெரிய கோவில் அருகே மேம்பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

செடிகள்

இதனால் மேம்பாலத்தில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்த நிலையில் மேம்பாலத்தில் உள்ள தூண்கள் மற்றும், சிறிய விரிசல்கள் இடையே செடிகள் வளர்ந்துள்ளன. இவை நாளடைவில் மரங்களாக வளரக்கூடிய சூழல் நிலவுகிறது.

மேலும், வளர்ந்திருக்கும் செடிகளால் மேம்பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெரிய கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் வளர்ந்திருக்கும் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்